பருவ வயதை தொட்ட பெண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்!

560

vithu varumuthal,tamil kamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , antharangam , tamil kamasutra tamilxdoctor , tamil sex doctor , அந்தரங்கம் Antharangam


தற்போதுள்ள வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை.

இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும் தான் இந்த பிரச்சனைகளை நிரந்தர தீர்வாகும்.

• பெண்களுக்கு எலும்பு வலி, முதுகு வலி மற்றும் கால் வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும் போது, வைட்டமின் டி பரிசோதனையை மேற்கொள்வது நல்லது என்கிறார் எலும்பு மருத்துவ நிபுணர். ஏனெனில் இது இளம் பெண்கள் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான பரிசோதனையாகும்.
80 முதல் 90 சதவீத இளம் பெண்களின் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. எனவே, அனைத்து பெண்களும் அந்தந்த பருவத்தில் வைட்டமின் டி பரிசோதனையை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். முதுமைப் பருவத்தில் உள்ள பெண்களைத் தாக்கும் எலும்புப்புரை நோய் (Osteoporosis) அல்ல இது.

• மார்பகங்களில் கட்டிகள் வருவதும் மற்றும் ஒழுங்கற்ற தன்மை இருப்பதும் தான் பிரச்சனைக்கான முதல் அறிகுறி. சுயமாக பரிசோதனை செய்யும் போது கட்டிகள் இருப்பது தெரிய வந்தால், மாம்மோகிராம்ஸ் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

728×90
இளம் பெண்களால், பெரும்பாலும் தவிர்க்கப்படும் முக்கியமான பரிசோதனைகளில் ஒன்றாக மார்பகங்களை பரிசோதனை உள்ளது. ஒரு பெண் 25 வயதை அடைந்து விட்டாலேயே இந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். சுயமாக பரிசோதனை செய்து கொள்ளுதல். கட்டிகள், வீக்கங்கள் அல்லது மார்பகங்களில் அசாதாரண வளர்ச்சி ஆகியவை உள்ளதா என பரிசோதித்து பார்த்தல்.

• தொடர்ந்து தாகமாக இருத்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுதல், திடீரென்று அதிகமாக பசி எடுத்தல், தாங்க முடியாத களைப்பு, மயக்க உணர்வு, பார்வை மங்குதல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும் போது சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டும்.

இன்றைய இளம் பெண்கள் தங்களுடைய எடையைக் குறைக்கவும் மற்றும் வயிற்றின் தொப்பையைக் குறைக்கவும் போராடி வருகின்றனர். இந்த இரண்டு காரணங்களுக்காகவே, 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் அதை விட வயது குறைந்த பெண்கள் என அனைவரும் சர்க்கரை பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.

• எடை அதிகரித்தல், சோம்பல், மாதவிடாய் தவறி வருதல் மற்றும் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இந்த தைராய்டு பரிசோதனையை செய்ய வேண்டும். தைராய்டின் அளவு அதிகமாக இருப்பதையோ (Hyperthyroidism) அல்லது குறைவாக இருப்பதையோ (Hypothyroidism) பரிசோதிக்கவே இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த இரண்டு வகை பிரச்சனைகளுமே நமது நகரங்களில் பரவலாக காணப்படுகின்றன. 18 வயதை அடைந்த இளம் பெண்கள் அனைவருமே இந்த சீர்கேட்டிற்கான பரிசோதனையை உடனடியாக செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.