ஃபர்ஸ்ட் நைட்டே இல்லை. ரெண்டாவுது நைட்!

3281

tamil kathaigal.tamilsexstory, tamil new kamakathaikal, tamil ool kathaigal, Tamil Sex Stories, Tamil Sex Story


விவேக் ஒரு விதமான பரபரப்புடன் அலுவலகத்திற்கு வந்தான். யூ.எஸ்ஸில் ஒரு வருட ஆன்சைட் அசைன்மென்டில் இருந்தபின் மூன்று வாரங்களுக்கு முன் தாயகம் திரும்பி இருந்தான். அதை அடுத்து மூன்று வார விடுமுறைக்குப் பின் அன்றுதான் வேலையில் சேர்ந்திருந்தான். அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண் பார்க்கத் தொடங்கி இருந்தனர். இருபத்து ஏழு வயதான விவேக்கிற்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை. அவன் பரபரப்புக்குக் காரணம் அதுவல்ல. நல்ல பிள்ளையாக படித்து, படித்து முடித்த உடன் கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலைவாங்கி கடந்த ஐந்து வருடங்களில் ஸீனியர் ஸாஃப்ட்வேர் எஞ்சினியர் ஆகி கைகொள்ளாத அளவு சம்பளமும் வாங்கி கொண்டு இருக்கும் விவேக்குக்கு வாழ்வில் ஒரு பெரும் குறை. வாழ்வில் இதுவரை படிப்பு, வேலை இவைகளைத் தவிற வேறு எந்த விஷயத்திலும், முக்கியமாக செக்ஸில் அவனுக்கு எந்த விதமான அனுபவம் இல்லை என்பதே. தாய் தந்தையரிடம் மூன்று மாத அவகாசம் பெற்று வந்திருந்தான். இந்த மூன்று மாதங்களில் அறிந்த கொள்ள வேண்டியவைகள் அத்தனையிலும் கரை காண வேண்டும் என்பதே அவன் குறிக்கோள். அதுவே அவன் பரபரப்புக்கு காரணம்.

உதவிக்கு முதலில் அணுகியது அவனது நண்பன் தீபக். தீபக் அவனறிந்த சகலகலா வல்லவன். அவனை அழைத்துக் கொண்டு கேஃபடேரியாவுக்கு சென்றான்.

தீபக், “சோ, உனக்கு எல்லா விதமான எக்ஸ்பீரியஸும் வேணும். உன்னை மாதிரியான சாமியாரால மூணு மாசத்துல முடியுமான்னு தெரியல. எனி ஹவ். பாக்கலாம்”

“டேய், மச்சான், முதல்ல எனக்கு தண்ணி அடிக்க சொல்லி குடுடா”

“ஆமா, என்னவோ பெரிய டீடோடலர் பருப்புன்னு சொல்லிகிட்டு திரிஞ்சே? இப்ப ஏன் திடீர்னு?”

“ஒண்ணுமில்லை இப்பெல்லாம் பொண்ணுங்ககூட ட்ரிங்க்ஸ் சாப்படறாங்க. ஒருவேளை எனக்கு பாக்கற பொண்ணு இதுக்கு முன்னால ட்ரை பண்ணி இருந்தான்னு வை. அவமுன்னால அவமானமா போயிடும் இல்லையா?”

“அருமையான லாஜிக்தான் .. ஒருவேளை ஒரு குடிகாரியை உன் தலைல கட்டுனாகூட கம்பெனி குடுப்பேங்கற”

“டேய், அந்த மாதிரி எல்லாம் ஆகாது. எப்படியும் எங்க அப்பா அம்மா நல்ல ஃபேமிலில இருந்துதான் பாப்பாங்க. எங்க அப்பா அதுலயும் பயங்கர உஷார் பேர்வழி. ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் வெச்சு வர்ற மருமகளை பத்தின எல்லா விவரமும் சேகரிச்சுடுவார்”

“சோ, உனக்கு வரப்போறவகிட்டே நீ உன்னை Jack of All Tradesனு காமிச்சுக்கணும்”

“ஆமா .. ”

“சரி வா, தண்ணிக்கு எனக்கும் சேத்தி நீதான் பே பண்ணனும். ஓ,கேவா?”

“ஓ.கே. இன்னிக்கு சாயந்தரம் உனக்கு வெய்ட் பண்ணறேன்”

வரும் வழியில், “ஹாய் விவேக்! எப்ப ஊர்ல இருந்து வந்தே”

குரல் வந்த திசையில் அதிர்ச்சியுடன் பார்த்தான். விமலா. கல்லூரியில் அவனுக்கு இரண்டு வருடம் ஜூனியர். சென்னையில் அவனது ஃப்ளாட் இருக்கும் அதே கட்டிடத்தில் அவளது ஃப்ளாட். அவன் கல்லூரி முடித்ததிலிருந்து ஈமெயில் தொடர்பு. நல்ல நண்பி.

“ஏய், நீ எங்க இங்கே”

“நான் இங்க கான்ட்ராக்ட் எம்ப்ளாயிப்பா” அவள் பணிபுரிவது வேறு ஒரு நிறுவனத்தில் அதிலிருந்து அவன் கம்பெனிக்கு காண்ட்ராக்டில் வந்திருக்கிறாள்.

“வாவ் .. க்ரேட் .. நான் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் வந்தேன். முன்னே இருந்த ரூமைக் காலி பண்ணிட்டு போயிருந்தேன். இப்ப ஒரு சின்ன ஃப்ளாட் வாடகைக்கு எடுத்து இருக்கேன். ரெண்டு நாளா திங்க்ஸ் எல்லாம் வாங்கி செட்-அப் பண்ணினேன்”

“வாவ், அப்ப சனி ஞாயிறுல உன் ஃப்ளாட்டுக்கு வந்து சாப்படலாம்னு சொல்லு”

“ஏய், எனக்கு இன்னும் சமைக்கல்லாம் தெரியாது. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் அதா இப்பவே முன்னேற்பாடா…”

“எங்கிட்ட சொல்லவே இல்லையே? யார் பொண்ணு?”

“இன்னும் பாக்கல. மூணு மாசம் கழிச்சு பாக்க ஆரம்பிக்க சொல்லி இருக்கேன்”

“அப்பறம் எதுக்கு இப்பவே தனி ஃப்ளாட்? பேசாம இன்னும் கொஞ்ச நாள் எதாவுது ரும்ல இருக்கலாம் இல்லே?”

“ம்ம்ம் கொஞ்சம் ப்ரைவசி வேணும்னுதான்”

“பரவால்ல தேறிட்டே .. ஆமா, இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்கிட்ட பேசிகிட்டு இருந்தது தீபக்தானே”

“ஆமா”

“அவனையெல்லாம் ஒரு துரும்பு மாதிரி ட்ரீட் பண்ணுவே. இப்ப என்ன அவ்வளவு சீரியஸா ரொம்ப பவ்யமா உக்காந்து பேசிட்டு இருந்தே?”

“ம்ம்ம் .. எல்லாம் ஒரு காரணமாத்தான்” என்றவாறு ‘எங்கப்பன் குதிருகுள்ள இல்லை’ என்கிற முகபாவத்துடன் பதிலளித்தான்.

அவனை சீண்டி விளையாடுவதில் கில்லாடியான விமலா, “என்ன காரணம்? அவங்கிட்ட சீரியஸா கேக்கற மேட்டர்னா? யூ.எஸ்ல இருந்து யாரையாவுது புடிச்சுட்டு வந்துட்டயா”

“ஏய், உனக்கு என்னைப் பத்தி தெரியுமில்ல .. ”

“தெரியும் .. என்னை நீ ஒரு பொண்ணா பாக்கறது இல்லை. இல்லைன்னா இந்நேரம் இவ்வளவு நேரம் பேசின பயத்துல ட்ரௌஸர்ல மூச்சா போயிருப்பே. அதான் கேட்டேன்”

“ஏய், சும்மா பேசாதே .. யூ.எஸ்ல இருந்தப்பவே என் டீம்ல ரெண்டு பொண்ணுங்க இருந்துங்க தெரியுமா. அவங்ககூட வொர்க் பண்ணி ப்ராஜெக்டை ஸக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டு வந்து இருக்கேன்”

“நீதான் மெச்சிக்கணும். சரி. அப்ப வேற என்ன காரணம்?”

“அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் .. ”

அதற்கு விமலா, “மரியாதையா சொல்லு. இல்லேன்னா அங்கிள் ஆண்டிகிட்ட உன்னோட சகவாசம் சரியில்லேன்னு போட்டுக் கொடுத்துடுவேன்” என்றதும் அவன் முகம் பேயறைந்தாற் போல் மாறியது

“விமலா, ப்ளீஸ் நான் ஒரு காரணத்துக்காக அவன் கிட்ட பேசிட்டு இருந்தேன். ப்ளீஸ். உங்கிட்ட என்னால் சொல்ல முடியாது”

“அதான் ஏன்?”

“இது பர்ஸனல் மேட்டர்”

“என்ன பர்ஸனல் மேட்டர்? யூ.எஸ்ல இருந்தப்ப ஹோமோ ஆயிட்டயா?”

“அடச்சீ, சனியனே ஏண்டீ இப்படி படுத்துவே என்னை?”

“அப்ப சொல்லு .. ”

“வந்து .. எங்கயாவுது தனியா போய் பேசலாமா?”

“அதுவும் கரெக்ட்தான். பாக்கறவங்களுக்கு நீ ஸீனியரா இல்ல நான் ஸீனியரான்னு டவுட் வரப்போகுது” என்றவாறு இருவரும் ஒரு காஃபீ ஷாப்பிற்கு சென்றனர்.

“ஏய், நான் யார்கிட்டயும் சொல்லக் கூடாதூன்னு இருந்தேன் .. ”

“பரவால்ல சொல்லு … நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் .. ”

“வந்து .. கல்யாணம் பண்ணிக்கணும் ஆனா எனக்கு இது வரைக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸும் கிடையாது .. ”

கடினப்பட்டு சிரிப்பை அடக்கி, “கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸும் தேவையில்லைப்பா. பாக்க ஆள் வாட்ட சாட்டமா நல்லா இருக்கே. கை நிறைய சம்பாதிக்கறே. அந்த ரெண்டு குவாலிஃபிகேஷன் மட்டும் போதும்”

“நான் அதை சொல்லலடி .. இப்பெல்லாம் பொண்ணுங்க எல்லாம் தெரிஞ்சு வெச்சு இருக்குதுங்க. அதே மாதிரி என் வயசுல அவன் அவன் என்னெல்லாமோ பண்ணி இருக்கான். எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. அதனால .. ”

“அதனால?”

“அதனால இந்த மூணு மாசத்துல தேவையானதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ..”

“அதுக்கு அவன் என்ன பண்ணப் போறான்?”

“எல்லா விஷயத்துலும் அவனுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதான் அவன் கிட்ட அட்வைஸ் கேட்டேன்”

“தெரிஞ்சுக்கறதுக்கு அவன் எதுக்குடா? தேவையான விவரமெல்லாம் நெட்டுலயே இருக்கே. உனக்கு என்னென்ன விஷயம் தெரிஞ்சுக்கணும்னு சொல்லு அதுக்கெல்லாம் நான் உனக்கு லிங்க் அனுப்பறேன்”

“அடிப்பாவி! உனக்குகூட எலலாம் தெரியுமா?”

“ம்ம்ம் .. தியரிடிகலா எல்லாம் தெரியும். ப்ராக்டிகலா இல்ல”

“எனக்கு தியரியே கொஞ்சம் ஒதைக்குது”

“வெளில சொல்லிக்காதே. சோ, இனிமேல் அந்த தீபக்கை கட் பண்ணிடு”

“நத்திங்க் டூயிங்க். வெறும் தியரியை வெச்சுட்டு எனக்கு வரப் போறவகிட்ட நான் அவமானப் படப் போறதில்லை. எல்லா விஷயத்தையும் அவன் ஹெல்ப்போட் ப்ராக்டிலா தெரிஞ்சுக்கப் போறேன்”

“விவேக், வேண்டாம். எதாவுது விவகாரத்துல மாட்டிக்க போறே”

“அந்த மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்லை ..”

“சரி, கல்யாணத்துக்கு முன்னால் என்னெல்லாம் பண்ணனும்னு இருக்கேன்னு நீ ஒரு லிஸ்ட் போட்டு கொடு. அப்பறம் நான் ஓ.கேவா இல்லையான்னு சொல்றேன்”

“நீ யாரு எனக்கு ஓ.கேவா இல்லையான்னு சொல்றதுக்கு?”

“நான் யாரா? இப்போதைக்கு நான் தான் உனக்கு கார்டியன் ஏஞ்சல். இப்ப ஊர்ல இருந்து வரும்போது கூட ஆண்டி எங்கிட்ட உன்னை பத்தரமா பாத்துக்க சொன்னாங்க. நீ எனக்கு தெரியாம எதாவுது செஞ்சே .. அப்பறம் அடுத்த நாள் என்ன ஏதுன்னு கேக்க உங்க அப்பா இங்க இருப்பார்”

“சனியனே. சொல்லித் தொலைக்கறேன்”

“ம்ம்ம் .. சொல்லு”

“முதல்ல தண்ணியடிக்கறது .. ”

“டேய், அந்த எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் உனக்கு எதுக்கு?”

“கட்டிக்கப் போறவ எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சுடக்கூடாது. அதுக்குத்தான். சும்மா ஒரு தடவை ட்ரை பண்ணி பாக்கப் போறேன்”

“எதுக்கெடுத்தாலும் கட்டிக்கப் போறவங்கறயே? எந்த மாதிரி பொண்ணு வேணும்னு அங்கிள் ஆண்டி கிட்ட சொல்லி இருக்கயா?”

“அவங்க எப்படியும் நல்ல பொண்ணாத்தான் பாப்பாங்க. எதுக்கு சும்மா கண்டிஷன் போடணும்னு விட்டுட்டேன்”

“ம்ஹூம் .. உன்னை திருத்தவே முடியாது. நீ வேணும்னா பாரு. உனக்கு வரப்போறவ இந்த மாதிரி எல்லாம் நீ பண்ணினேன்னு தெரிஞ்சு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே உன்னை பெண்டு நிமித்தப் போறா”

“நீ போட்டுக் கொடுக்காட்டி அவளுக்கு ஒண்ணும் தெரியாது ..”

“ம்ம்ம் … அந்த பயம் இருக்கட்டும்”

“சும்மா ஒரேடியா மிரட்டாதே .. பை .. அய்யா கொஞ்சம் வேலையை முடிச்சுட்டு சாயங்காலம் தண்ணி அடிக்கப் போறேன்”

“சரி, அடுத்தது என்ன?”

“ம்ம்ம் .. நாளைக்கு சொல்றேன் ..”

இருக்கைக்கு செல்லும் வழியின் பாதியில் அவனது டீம் லீடர் சுரேஷ் வேறொரு கட்டிடத்திலிருந்து வந்து கொண்டு இருந்தான்.

“என்னடா விவேக். யாரோ புதுசா வந்திருக்கற பொண்ணை கரெக்ட் பண்ணற மாதிரி இருக்கு?”

“இல்லை சுரேஷ். அவ என்னோட ஜூனியர். ஆல்சோ மை நெய்பர் இன் சென்னை”

“சும்மா சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை பாத்தா அவதான் உன்னை கரெக்ட் பண்ணற மாதிரி இருந்துது”

“அவளா என்னையா? நல்லா ஜோக் அடிக்கறீங்க. அவளுக்கு நிறைய பேர் க்யூவுல நிப்பாங்க. என் மூஞ்சிக்கு அவ என்னை ஒரு ஃப்ரெண்டா பாக்கறதே பெருசு”

“ஏண்டா இவ்வளவு இன்ஃபீரியாரிடி காம்ப்ளெக்ஸ் உனக்கு?”

“அது மட்டும் இல்ல சுரேஷ். அவ படு ஸ்மார்ட்”

“ஏன் நீ ஸ்மார்ட் இல்லையா?”

“அப்படி இல்லே .. அவ எல்லா விஷயத்துலயும் ஸ்மார்ட்”

“ஓஹோ .. உனக்கு எந்த விஷயத்துல ஸ்மார்ட்னெஸ் கம்மி?”

“விடுங்க சுரேஷ் .. அதெல்லாம் பர்ஸனெல் மேட்டர்”

“சரி .. சரி”

அடுத்த நாள் ..

மணி பத்தரை ஆகியும் விவேக் இன்னும் ஆஃபீஸ் வந்து சேரவில்லை ..

விமலாவுக்கு பயம். அவன் புது கைபேசியின் எண்ணை குறித்துக் கொள்ளாமல் போனதை எண்ணி தன்னை நொந்தாள். வேறு வழியில்லாமல் தீபக்கின் இருக்கைக்கு சென்றாள். தீபக் அங்கு கடு கடுத்த முகத்துடன் அமர்ந்திருந்தான்.

“தீபக், விவேக் எங்கேன்னு தெரியுமா?”

“இங்க பாரு விமலா, ஏற்கனவே நான் அந்த நாயினால செம கடுப்புல இருக்கேன். நீயும் மேல கடுப்பேத்தாதே”

“நேத்து உங்கூட தண்ணி அடிக்கப் போறதா சொன்னான் அதான் கேட்டேன். என்ன ஆச்சு?”

மனதுக்குள் ‘இவகிட்ட எல்லாம் எதுக்கு சொன்னான்?’ என்று விவேக்கை மேலும் அவனுக்கு தெரிந்த மொழிகளில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தையாலும் திட்டித் தீர்த்தபிறகு, “என்ன ஆச்சா? தண்ணி அடிக்கணும், சொல்லிக் கொடுடான்னு ஒரு காஸ்ட்லியான பார்-ரெஸ்டாரன்டுக்கு கூட்டிட்டு போனான்”

“அப்பறம்”

“நான் எப்பவும் மூணு ரவுண்டு அடிப்பேன் .. முதல் ரவுண்டு கொஞ்சம் வேகமா அடிச்சாலும் மத்த ரெண்டும் மெதுவாத்தான் அடிப்பேன்”

“நான் உன்னைப் பத்தி கேக்கல”

“ஐய்யோ .. சொல்றேன் தாயே .. இவன் என்னடான்னா மொதல் ரவுண்டை எனக்கு முன்னால முடிச்சுட்டான். சரி, பையன் இது வரைக்கும் அடிச்சதில்லைன்னு சும்மா பொய் சொல்லி இருக்கான்னு நினைச்சு அடுத்த ரவுண்டுக்கு ஆர்டர் பண்ணினேன். மொதல்ல கொண்டு வந்து வெச்ச ஷார்ட் ஈட்ஸை நான் கொஞ்சம் கொறிக்கறதுக்கு முன்னால அவன் ப்ளேட்டை காலி பண்ணிட்டு மறுபடி ஆர்டர் பண்ணினான். நான் வேண்டாண்டா இங்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கும்ன்னு சொன்னேன். ஐய்யா ‘நீ பணத்தைப் பத்தி கவலைப் படாதே. ஆன்சைட் போனப்ப எனக்கு கிடைச்ச லோகல் ட்ராவல் அல்லவன்ஸ்லயே நான் இன்னும் ஆயிரம் டாலருக்கு மேல சேத்து வெச்சு இருக்கேன்’ அப்படீன்னான். எதை எதையோ வாங்கி தின்னான்.”

“ம்ம்ம்”

“நான் மூணாவுது ரவுண்டை தொடறதுக்கு முன்னாடி அவன் நாலு ரவுண்டு முடிச்சுட்டான். நடுவுல ஒரே பாலிடிக்ஸ், எகனாமிக்ஸ், ஃபிலாசஃபி, லிட்டரேச்சர்னு என்னமோ பேசிட்டு இருந்தான். சரி பையன் ரொம்ப ஸ்டடியா இருக்கான்னு நினைச்சேன்”

“ம்ம்ம்”

“கொஞ்ச நேரம் கழிச்சு, ‘நல்லா இருக்குடா மச்சி, ரியலி நைஸ் ஃபீலிங்க். ஆனா ஒண்ணுடா கிக் எல்லாம் ஒண்ணும் இல்லை. தலைதான் கொஞ்சம் சுத்துது’ அப்படீன்னான். அப்பவே அவனை வெளில கூட்டிட்டு வந்துடனும்னு நினைச்சேன்”